சென்னை: தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது.
இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பது மையமாக இடம்பெற்றிருக்கும். இதனை ஆஹா டிஜிட்டல் குழுமமும் தானாக முன்வந்து முன்மொழிந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக்கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை விஜய் சேதுபதி வழங்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாமனிதன்', நம் மண்ணின் வாழும் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியல் பதிவு என்பதும், இதனை இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கே உரிய பாணியில் இயக்கி, ரசிகர்களை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறார் என்பதும் உண்மை.
இதையும் படிங்க:அடுத்த போட்டிகளில் தங்கம் - நீரஜ் சோப்ரா உறுதி