தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவாரண முகாமில் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிய காவலர்கள் - நிவாரண முகாம்

நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு வயது பெண் குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு காவல் ஆணையர் நேரில் சென்று பரிசு வழங்கினார்.

நிவாரண முகாமில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்கள்
நிவாரண முகாமில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்கள்

By

Published : Nov 12, 2021, 4:16 PM IST

சென்னையில் பெய்த கனமழையால் வீடுகள் இழந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்ட மோனிகா என்ற ஒரு வயது பெண் குழந்தைக்குப் பிறந்த நாள் எனத் தெரியவந்தவுடன் துரைப்பாக்கம் காவல் துறையினர் புத்தாடை, சாக்லேட், பலூன் கட்டி, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

காவலருக்குப் பாராட்டு

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பெண் குழந்தைக்குப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் துரைப்பாக்கம் காவல் துறையினரையும் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை: வெள்ள நீரில் தத்தளிக்கும் 4,000 வீடுகள்!

ABOUT THE AUTHOR

...view details