சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன்(35). இவர் சென்னை அண்ணா நகர் மேற்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 1:30 மணியளவில் அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்குச் சென்று காசோலை மூலம் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகன பின் சீட்டில் வைத்து லாக் செய்துள்ளார்.
பைக் லாக்கை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு! - விசாரணை செய்து வரும் திருமங்கலம் காவல் நிலையம்
சென்னை: அண்ணாநகரில் இருசக்கர வாகன லாக்கை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்பு பணத்தை இழந்தவர் இதுகுறித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை செய்து வரும் திருமங்கலம் காவல் நிலையம்
திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்த காவல் நிலையம்
பின்பு, 2ஆவது அவென்யூவில் உள்ள பிரிமாஸ் பேக்கரி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த சூப்பர் மார்கெட் சென்றுள்ளார். பின்பு, திரும்பி வந்து கதிரவன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை பார்த்தபோது பின் சீட்டு லாக்கரை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தை யாரோ கொள்ளையடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர்.