தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புத்தகக் கண்காட்சியில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனையாகும்' - புத்தக விற்பனையாளர் சங்கம்

45ஆவது புத்தகக் கண்காட்சியில் 500 பதிப்பகங்கள் மூலம் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தக விற்பனையாளர் சங்கம்
புத்தக விற்பனையாளர் சங்கம்

By

Published : Feb 5, 2022, 4:23 PM IST

சென்னை: புத்தகக் கண்காட்சி தொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பபாசி செயலாளர் முருகன் பேசியதாவது, “45ஆவது புத்தகக் கண்காட்சி வரும் 16ஆம் தேதிமுதல் மார்ச் 6ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

கரோனா தொற்று காரணமாக, ஜனவரியில் நடைபெற இருந்த புத்தகக் கண்காட்சி தற்போது நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். ஜனவரியில் ஆயிரம் அரங்குகள் வரை வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 800 அரங்குகளில், 500 பதிப்பகங்கள் மூலம், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்கள் விற்கப்படவுள்ளன.

அதேபோல் கடந்தாண்டு போன்றே கரோனா வழிமுறைகள் பின்பற்றி, காலை 11 மணிமுதல் 8 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தமிழர்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும்வகையில், தொல்லியல் துறை சார்பில் ஐந்தாயிரம் சதுர அடியில், கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன. குழந்தைகளுக்குப் படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்படவுள்ளன. கரோனா காலம் என்பதால், இந்தாண்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.

bapasi.com என்கிற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். சிறந்த எழுத்தாளர்கள் ஆறு பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதினை மு.க. ஸ்டாலின் தொடக்க நாளில் வழங்கவுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்போம் - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details