சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நிலை 1இல் 814 பணியிடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் சர்வர் குளறுபடியால் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றது எனத் தேர்வர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மேலும், மூன்று மையங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரிக்க தனி நீதிபதி விசாரணைக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதனுடைய அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில், கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்திற்கு நீதிபதி ஆதிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித்துறையில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 814 பேரை நியமனம் செய்வதற்கு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, கும்பகோணம் அன்னை பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம் என்றார்.
மேலும்,
One man committee,