தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூத்த குடிமக்களின் குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்! - முதியோர் காப்பகம்

சென்னை: மூத்த குடிமக்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க தமிழக அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

old aged people
old aged people

By

Published : Nov 26, 2019, 9:25 PM IST

தமிழக அரசு முதியோர்களுக்கு சமூக நலத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செய்துவருகிறது. முதியோர் உதவித்தொகை வழங்குதல், முதியோர் இல்லங்கள் ஒருங்கிணைந்த வளாகம், பிசியோதெரபி கிளினிக் ஆகிய உதவிகளை வழங்கிவருகிறது. மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பரமாரிப்பு சட்டம் (2007) தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது.

முதியோர்களுக்கு தேவையான உதவிகளை பெற 1253 (சென்னை மட்டும்) என்ற எண்ணும், பிற பகுதிகளுக்கு 18001801253 என்ற எண்ணும் ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி மூத்த குடிமக்கள் பிரச்னை மற்றும் குறைகளை தெரிவிக்க 044 24350375, 93612 72792 எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details