தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழுதடைந்த லாரி... சாலை முழுவதும் கொட்டிய எண்ணெய்! - விரைந்து செயல்பட்ட காவல் துறை

சென்னை: ராயபுரம் புதிய மேம்பாலத்தில் லாரியிலிருந்து கொட்டிய எண்ணெய்யை காவல் துறையினர் விரைந்துசெயல்பட்டு சீர் செய்தனர்.

Chennai royapuram oil spills road

By

Published : Oct 12, 2019, 7:44 AM IST

சென்னை ராயபுரம் புதிய மேம்பாலத்தில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் லாரி சென்றுகொண்டிருந்தபோது பழுது ஏற்பட்டதால் எண்ணெய் சாலை முழுவதும் கொட்டியது.

லாரியிலிருந்து கொட்டிய எண்ணெய்

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ராயபுரம் போக்குவரத்துக் காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படாதவாறு மண்ணைக் கொட்டி சாலையை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனைக்கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் போக்குவரத்துக் காவல் துறையினரின் துரித செயலைக் கண்டு வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.

இதையும் படிக்க: எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவா? - ஷாக் கொடுத்த ரயில்வே நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details