தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் குளத்தை ஆக்கிரமிக்கும் அலுவலர்கள்: போராட்டத்தில் இறங்கிய மக்கள் - கான்க்ரீட் சுவர் அமைத்து குளத்தை அபகரிக்கும் அலுவலர்கள்

சென்னை: போரூர் அருகே கோயில் குளத்தை மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி ஊர் மக்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

 Officers occupying the temple pond: People went down the struggle
Officers occupying the temple pond: People went down the struggle

By

Published : Aug 18, 2020, 7:53 PM IST

சென்னை போரூர் அருகேயுள்ள செட்டியாரகரம் 150 வட்டம் பகுதியில் ஸ்ரீ தேவி பூதேவி ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகே கோயிலுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இந்த குளத்தில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கரை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், குளத்தின் நடுவே கான்க்ரீட் சுவர் கட்டும் பணியும் நடைபெற்றுவருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதிமக்கள் சிலர் கோயில் குளத்தில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர். கான்க்ரீட் சுவர் அமைத்து குளத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் அரசு அலுவலர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஸ்ரீ தேவி பூதேவி கோயிலுக்கு சொந்தமான இந்த குளம் சுமார் 500 ஆண்டுகளுக்கும் பழமையானது. இது மொத்தம் நான்கு ஏக்கர் பரப்பளவில் இருந்துள்ளது. தற்போது குளங்களை சுற்றி நடைபெறும் ஆக்கிரமிப்பு பணிகளால் தொடர்ந்து அதன்பரப்பளவு குறைந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாமல் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் குளத்தின் நடுவே கான்க்ரீட் சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு துணைபோகின்றனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள், தாசில்தார் ஆகியோர் உடனடியாக தலையிட்டு குளத்தை முழுவதுமாக தூர்வாரி ஆக்கிரமிப்பு களை அகற்ற வேன்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details