தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 24, 2020, 3:22 PM IST

ETV Bharat / state

களப்பணியாளர் மகளுக்கு அரசு வேலை அளிக்கக்கோரி மனு; தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசிலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி கரோனா சிகிச்சைப் பணியில் களப் பணியாளராக ஈடுபட்டு கடந்த ஜூன் மாதம் கரோனா பாதித்து உயிரிழந்தார்.

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் மனுவில், ஏற்கனவே காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று விட்டதாகவும், வேலையில்லாமல் உள்ள தனது இளைய மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: பண்டிகை கால சிறப்பு ரயில்கள் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details