தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சென்னை: செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடர்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத் துறை செயலர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court

By

Published : Aug 13, 2019, 10:04 PM IST

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர்கள் 7000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 2017ஆம் ஆண்டு பணியை நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதால் செவிலியர் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காதாரத் துறை செயலர் குழு அமைத்து செவிலியர்களுடன் ஆறு மாதங்களில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை முடிக்க உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் செவிலியர்கள் சுகாதாரத் துறை செயலர் தலைமையிலான குழுவிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர் . இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் செவிலியர் சங்கம் சார்பில் சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டீ ஆஷா அமர்வு இந்த மனு குறித்து சுகாதாரத் துறை செயலர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details