இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது ஆண் கடந்த 2ஆம் தேதி காலை 9.45 மணிக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி, அதே நாள் 11.45 மணிக்கு உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு! - மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை
09:02 April 05
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, தற்போது கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இதேபோன்று கடந்த ஒன்றாம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, சிகிச்சை பெற்றுவந்த சென்னையைச் சேர்ந்த 60 வயது ஆண் இன்று அதிகாலை (ஏப்ரல் 5) 1.45 மணிக்கு உயிரிழந்தார்” என்று அந்த அறிக்கையில் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க...சேலத்தில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று!