தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

-etv-bharat-tamilnadu
-etv-bharat-tamilnadu

By

Published : Nov 1, 2020, 4:56 PM IST

திருத்தணியில் தொடங்கும் ’வெற்றிவேல் யாத்திரை’: தமிழ்நாட்டில் மலருமா தாமரை?

வெற்றிவேல் யாத்திரை நடைபெறும் தேதி, இடத்தை தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நாள் 2020: வாழ்த்து தெரிவித்த துணை குடியரசு தலைவர்!

மொழி வாரியாக மாநிலங்கள் உதயமான நாளான இன்று தமிழ்நாட்டிற்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

திருமணம் ஆகாமல் மகள் கர்ப்பம் - கொலை செய்த பெற்றோர்

உத்தரப் பிரதேச பிரத்தாப்புகர் மாவட்டத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பம்தரித்த தனது மகளை பெற்றோர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான உள் இடஒதுக்கீடு: ஸ்டாலின் அறிக்கை

“மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள்இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்” என திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீன்வளப் பல்கலை - முதுநிலை மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த இளைஞரிடம் செல்போன் பறிப்பு!

ரேபிடோ பைக் டாக்ஸி புக் செய்த இளைஞரின் ஸ்மார்ட்போனை, பைக் ஓட்டுநர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இது என்னுடைய கடைசி போட்டியல்ல’ - தோனி பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

இது என்னுடைய கடைசி போட்டியல்ல என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளது, சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வைரமுத்துவிற்கு ஓவியம் பரிசளித்த ஆயுள் தண்டனைக் கைதி!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியமுடன், கவிஞர் வைரமுத்து தோழமையுடன் நிற்பது போன்ற ஓவியத்தை ஆயுள் தண்டனைக் கைதி பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details