தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு வாகனங்களின் சான்றுகளுக்கான புதுப்பித்தல் கட்டண உயர்வு அறிவிப்பு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - MHC

சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரக்கு வாகனங்களின் சான்றுகளுக்கான புதுப்பித்தல் கட்டண உயர்வு அறிவிப்பு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சரக்கு வாகனங்களின் சான்றுகளுக்கான புதுப்பித்தல் கட்டண உயர்வு அறிவிப்பு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 27, 2022, 12:05 PM IST

சென்னை: கடந்த 2021 அக்டோபரில், கனரக சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 1,500 ரூபாயாகவும், நடுத்தர சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை 1,300 ரூபாயாகவும் உயர்த்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.

அதேபோல் பதிவுச்சான்றை புதுப்பிக்க தாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் 500 ரூபாயும், தகுதிச்சான்று புதுப்பிக்க தாமதமாகும் நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, இதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் குமாரசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “மத்திய அரசின் கட்டண உயர்வு மற்றும் கூடுதல் கட்டண அறிவிப்பு என்பது 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு மட்டும் விதிப்பது முற்றிலும் சட்ட விரோதமானது. கடந்த 2016 ஆம் ஆண்டு, இதேபோல் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பிக்க ஒரே நடைமுறையை பின்பற்றும் நிலையில், சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது தன்னிச்சையானது என்பதால் இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆறு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details