சென்னைஅருகே பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியப்பகுதியில் சந்தேகிக்கும்படி இருந்த வடமாநில நபரைப் பிடித்து, காவல் துறையினர் விசாரித்ததில் அவரது இருசக்கர வாகனத்தில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த மணிராம்(45) என்பதும், பெரும்பாக்கம் எழில் நகர்ப்பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கஞ்சாவைப் பதுக்கி வைத்து சிறு, சிறு பொட்டலங்களாகப் போட்டு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வடமாநில நபர் கைது... 11 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வட மாநில நபரை கைது செய்து அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வட மாநில நபர் கைது...11 கிலோ கஞ்சா பறிமுதல்
அந்த தகவலின் பேரில் அவரது வீட்டை பெரும்பாக்கம் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு 6 கிலோ கஞ்சா இருந்தது. பின் அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மொத்தமாக 11 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த பெரும்பாக்கம் போலீசார், மணிராம் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வேலை செய்யும் கடையில் வெண்கல சிலைகளை திருடியவர் கைது