சென்னை:மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று (ஜனவரி 22) வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலின் எஸ்4 பெட்டியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோனி (24) மற்றும் அவரது உறவினர் அசரப் ஷெக் (24) ஆகிய இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் ரயில் படிக்கட்டுக்கு அருகே அமர்ந்து வந்துள்ளனர். இந்த ரயில், சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது ரோனி, தனது செல்போனில் படம் பார்த்துக் கொண்டே வந்துள்ளார்.
அந்த நேரத்தில், தண்டவாளத்துக்கு அருகே கீழே நின்று அடையாளம் தெரியாத நபர், திடீரென ரோனியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது செல்போன் கீழே விழுந்துள்ளது. இதனால் ரோனியும் செல்போனை பிடிக்க கீழே குதித்தபோது எதிர்பாராத விதமாக அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.