தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் புகை இல்லா போகி பண்டிகை - காற்று தரக் குறியீடு

சென்னை: பொங்கலுக்கு முன் கொண்டாடப்படும் போகி பண்டிகையில் இந்த வருடம் சென்னையில் அதிகமான காற்று மாசுபாடு இல்லை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் புகை இல்லா போகி பண்டிகை
சென்னையில் புகை இல்லா போகி பண்டிகை

By

Published : Jan 13, 2021, 3:13 PM IST

பொங்கலுக்கு முன் கொண்டாடப்படும் போகி பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பாடுகிறது. அதன்படி இன்று அதிகாலை சென்னை மக்கள் பழைய பொருட்களை எரித்து பண்டிகையை கொண்டாடினர். எனினும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு மக்கள் அதிகளவில் பழைய பொருட்களை எரித்து கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களில் ஒரு சிலர் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் பழைய துணிகள் போன்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடினர்.

போகி பண்டிகையின்போது தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அபராதம் ஏதும் விதிக்காமல் விழிப்புணர்வு வாயிலாக காற்று மாசு ஏற்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்.

சென்னை மாநகரில் காற்றின் மாசுபாடு மற்றும் காற்றுத் தரக் குறியீட்டை கண்காணிக்க, மாநகரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மணலியில் காற்றுத் தரக் குறியீடு 106, ஆலந்தூரில் 120, வேளச்சேரியில் 75, கொடுங்கையூரில் 125, ராயபுரத்தில் 90 மற்றும் பெருங்குடியில் அதிகபட்சமாக 111 பதிவாகியுள்ளது. காற்றுத் தரக் குறியீடு 50க்கும் மேல் இருந்தால், மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details