ஊரக உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 09.12.19 முதல் பெறப்பட்டு வருகிறது.
வேட்பு மனுக்களைப் பெறுவதற்கான கடைசி நாளாக 16.12.19ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற 14.12.19ஆம் தேதி சனிக்கிழமை பொது விடுமுறை இல்லை என்பதால், அன்றும் வேட்பு மனுக்கள் பெறப்படும். எனவே தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர்கள் 14.12.19 அன்றும் வேட்பு மனுக்களை பெறுவதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.