தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெகிழித் தடை: விதிவிலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை - NO TO PLASTIC

சென்னை : உணவுப்பொருள்களை அடைக்க பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை நீக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

NO TO PLASTIC : Pollution control board recommendation!
நெகிழி தடை : விதி விலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை !

By

Published : Mar 4, 2020, 8:04 AM IST

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்குத் தடைவிதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்னால் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் சுற்றுச்சூழல் துறை, வனத் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தரப்பில் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ”கடந்த ஓராண்டில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்திசெய்த 52 தொழிற்சாலைகளை மூடவும், மின் இணைப்புகளைத் துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 444 உணவக விடுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, 42 விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

மேலும், மசூதிகள், தேவாலயங்கள், கோயில்களுக்கு அருகில் உள்ள கடைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெகிழிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நெகிழித் தடை: விதிவிலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

போராட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பதைக் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் வேண்டுகோள்விடுத்திருதிருக்கிறார்.

அதேபோல, தமிழ்நாடு அரசின் இந்த நெகிழித் தடை உத்தரவிலிருந்து பால், தயிர், எண்ணெய் போன்ற உணவுப்பொருள்களை அடைக்க பயன்படுத்தும் நெகிழிக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி பரிந்துரை அளித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் அனைத்து வகையான நெகிழிப் பொருள்களுக்கும் தடைவிதிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உணவுப் பொருள்களை அடைத்துவைக்கும் நெகிழிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கை நீக்குவது குறித்த அரசின் அறிக்கையை பதிவுசெய்த நீதிபதிகள், ஆவின் பால் நிறுவனத்திலிருந்து இந்த நடவடிக்கை தொடங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும், நெகிழி விழிப்புணர்வு ஆவணப்படங்களைத் திரைப்படங்களில் சேர்க்கவும், கல்வி நிறுவனங்களில் நெகிழிகளின் தீங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், நெகிழி உற்பத்தி நிறுவனங்கள் சமூகநலனைக் கருத்தில்கொண்டு மாற்றுப்பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க : போராட்டங்கள் மூலம் நீதிமன்றத்தை நிர்பந்திப்பதா? - நீதிபதிகள் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details