தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சொத்து வரி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தவிர்த்து, எந்த ஒரு கட்சியும் தங்களிடம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை' - CPM has raised objection to property tax hike to chennai corporation

சென்னையில் சொத்துவரி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்து, எந்த ஒரு கட்சியும் தங்களின் ஆட்சேபனைகளை சென்னை மாநகராட்சியிடம் தெரிவிக்கவில்லை.

சொத்து வரி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தவிர்த்து எந்த ஒரு கட்சியும் தங்களின் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை
சொத்து வரி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தவிர்த்து எந்த ஒரு கட்சியும் தங்களின் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

By

Published : May 31, 2022, 8:12 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது. சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது.

இதன்படி சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இனி, ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பான ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை / 600003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

’சொத்து வரி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தவிர்த்து, எந்த ஒரு கட்சியும் தங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை’

இதன்படி 39 பேர் தங்களின் ஆட்சேபனை தெரிவித்து மனுக்களை அளித்து இருந்தனர். இதில் பெரும்பாலான ஆட்சேபனை மக்கள் குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் இருந்து வந்துள்ளது. அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), வட சென்னை மாவட்டக் குழு சார்பில் ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டு இருந்தது.

மேலும், 163 வயது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வன் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். இதைத்தவிர்த்து எந்த அரசியல் கட்சியும் சொத்து வரி உயர்வுக்கு எதிராக ஆட்சேபனைகளை அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகளுக்குப் பதில் அளித்தும், சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் மாமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஆய்வின்போது பத்திரிகையாளர் மீது பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details