சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடத்திட்டம், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் அறிமுகம் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகமான தொழிற்கல்வி பாடத்திட்டம், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.
மேலும், பியூட்டிஷியன், தையல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகள், மாவட்டத்திற்கு இரண்டு முதல் மூன்று அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம், மத்திய அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது.