கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்ற மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது. அதே போன்று மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்யவும் மத்திய அரசிற்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இன்றும் தஹில் ரமாணி முன் வழக்கு விசாரணை இல்லை! - சென்னை
சென்னை: உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி, குடியரசுத் தலைவருக்கு தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில், இரண்டாவது நாளாக அவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி, இந்த பரிந்துரையை ரத்து செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'இந்தியாவின் பழமை வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளுக்கு மேல் உள்ள நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டேன். தன்னை மூன்று நீதிபதிகளே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்ற வேண்டாம்' எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் செப்டம்பர் 3ஆம் தேதி நிராகரித்தது. இந்நிலையில், மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், தலைமை நீதிபதி தஹில் ரமாணி, இரண்டாவது நாளாக தனக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. தலைமை நீதிபதியின் ராஜினாமா கடிதம் குறித்து குடியரசுத் தலைவர் தன்னுடைய முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.