தமிழ்நாட்டில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மட்டுமே சென்னையில் 105 டிகிரி வெப்பம் நிலவியது.
வெறிச்சோடி காணப்படும் சுற்றுலாத் தலங்கள் - அனல் காற்று,
சென்னை: மழையின்மையின் காரணமாக வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசுவதால், சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
வெறிச்சோடி காட்சியளிக்கும் மெரினா
ஃபோனி புயலால் மழை வரும் என்ற எதிர்பார்ப்பும் பொய்துப்போன நிலையில், இன்றும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது.
கோடை காலங்களில் சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம். ஆனால், தற்போது வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி வருவதால் சுற்றுலாப் பயணிகளின்றி சென்னை மெரினா கடற்கரை மற்றும் அரசியல் தலைவர்கள் நினைவிடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.