சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், ராஜகீழ்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிவர் புயல், கனமழையின் காரணமாக மழை நீரானது குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதோடு, குடியிருப்புகளுக்குள்ளும் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல்: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி! - nivar cyclone
சென்னை: ராஜகீழ்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இன்னும் வடியாத மழைநீராலும், மின் இணைப்புத் துண்டிப்பாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்
மேலும் நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், மழைநீரானது வடியாததால் வாகன ஓட்டிகளும் நீந்திச் செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே தேங்கிய மழைநீரை வெளியேற்றி, மின் இணைப்பை வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க:'ஓட்டு கேட்க மட்டும் வருவார்கள்' - சாலை வசதி கோரும் நன்னிலம் மக்கள்