தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

' திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்றுங்கள் ' - சீமானுக்கு கைலாஷ் பிரதமர்  அலுவலகம் உத்தரவு!

சென்னை: குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாஷ் சென்றுவிடலாம் என கலாய்த்த சீமானுக்கு நித்யானந்தா அலுவலக அட்மின் பதிலளித்துள்ளார்.

சீமானுக்கு கைலாஷ் பிரதமர் உத்தரவு!
சீமானுக்கு கைலாஷ் பிரதமர் உத்தரவு!

By

Published : Dec 19, 2019, 12:42 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கும் வேளையில், குடியுரிமை மறுக்கப்பட்டால் நித்யானந்தாவின் ' கைலாஷ் நாடு இருக்கிறது ' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நித்யானந்தா அலுவலக அட்மின், ' ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல, தமிழ்ப் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோயிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்குக் குடியுரிமை வழங்கத் தயார்!!!. - பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ்' என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை சீமான் தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பன்றி வேட்டைக்குத் தயாரான சீமான்; தடுத்த பிரபாகரன்!

ABOUT THE AUTHOR

...view details