சென்னை:அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம்! - நிலோபர் கபில்
18:41 May 21
கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி, நிலோபர் கபீல் அமைச்சர் கே.சி. வீரமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும், திமுகவின் மூத்த தலைவர் துரை முருகனுடன் கே. சி. வீரமணி ரகசிய உறவு வைத்து கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையும் படிங்க: 'அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் துரை முருகனும் ரகசிய உறவு'- குற்றஞ்சாட்டும் நிலோபர் கபில்