சென்னை:வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவிற்குள் ஊடுருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையிலும் பல்வேறு இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், இன்று (நவ.8) காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, படப்பை உள்ளிட்ட மூன்று இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இடத்திலும், மற்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.