தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 28 பேருக்கு கரோனா பாதிப்பு! - மொத்த கரோனா பாதிப்புகள்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 28 நபர்கள் உட்பட 229 பேருக்கு கரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

tamil nadu corona count  corona update  corona count  corona in tamil nadu  கரோனா பாதிப்புகள்  தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை  மொத்த கரோனா பாதிப்புகள்  கரோனா நிலவரம்
28 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Apr 11, 2022, 9:14 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (ஏப்ரல் 11) வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 17 ஆயிரத்து 186 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த மேலும் 28 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 கோடியே 46 லட்சத்து 59 ஆயிரத்து 158 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 112 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 229 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை. இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என தொடர்ந்து இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 10 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 4 நபர்களுக்கும், மதுரையில் மூன்று நபர்களுக்கும், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என 28 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 29 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகள்: சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு

ABOUT THE AUTHOR

...view details