சென்னை:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு புதிய திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி , ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு இதில் சிரமம் ஏற்படக்கூடும்.
எனவே மாணவர்கள் மருத்துவப் படிப்பை கைவிடக் கூடாது என்பதற்காக அரசு தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அரசு ஒதுக்கீட்டில் உள்ள 405 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 239 பேர் மாணவர்கள் சேர உள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 166 இடங்கள் உள்ளன. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த முடியாது என்பதால் சிறப்பு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது.