தமிழ்நாடு

tamil nadu

காசிமேட்டில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

By

Published : Aug 8, 2021, 1:28 PM IST

காசிமேட்டில் மீன் விற்பனை செய்வதற்கு மாநகராட்சி அலுவலர்கள் மீனவ சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி புதிய நேர கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.

new-restrictions-for-chennai-kasimedu-fisherman
new-restrictions-for-chennai-kasimedu-fisherman

சென்னை : கரோனா தொற்று பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது சில கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்து வருவதால் காசிமேட்டில் மீன் விற்பனை செய்வதற்கு புதிய நேர கட்டுபாடுகளை மாநகராட்சி அலுவலர்களும், மீன்வளத்துறை அலுவலர்களும், காவல்துறையினரும் மீனவ சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி புதிய சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதன்படி, காசிமேடு மீன் விற்பனை கூடம் அருகே விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யக்கூடிய இடத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மீன்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளனர். மேலும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். சில்லரை வியாபாரிகள்,பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக விசை படகுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யக்கூடிய இடத்தில் மொத்த வியாபாரிகள் மீன்களை நேரடியாக வாங்கி சில்லறை விற்பனை செய்யக்கூடிய இடங்களுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து விற்பனை செய்ய வேண்டும். ஒரே இடத்தில் அதிகப்படியான கூட்டம் கூடுவதனால் பொது மக்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். மீன்வளத் துறை அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காசிமேட்டில் மீன் விற்பனை
ஆடி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று (ஆக.08) பொதுவாக பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரத்தில் தடை விதிக்கப்பட்டதால் காசிமேடு மீன் விற்பனை செய்யும் இடத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் வியாபாரம் இல்லாததால் மீனவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details