இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடல் அரிப்பினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
புதுப்பட்டினத்தில் ரூ. 16.80 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளங்கள் - Minister Jayakumar latest news
சென்னை: புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் பகுதியில் 16.80 கோடி ரூபாய் மதிப்பில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடல் அரிப்பை தடுக்க நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள் அமைத்துத் தர இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் 2020-21ஆம் நிதி ஆண்டில் சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமத்தில் ரூ.16.80 கோடி மதிப்பீட்டில் நேர் கல் சுவர்களுடன் மூடிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசால் இந்த பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் தொடங்கும் நிலையில் உள்ளன. இப்பணிகள் நிறைவேற்றப்பட்டால் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமப்பகுதியில் கடலரிப்பு தடுக்கப்படுவதோடு மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.