தமிழ்நாடு

tamil nadu

கரோனா நோயாளிகளை தொலைவிலிருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவி அறிமுகம்!

By

Published : Jun 20, 2020, 9:32 PM IST

சென்னை: கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் அதிநவீன கருவி ஒன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  கரோனா தொற்று  சுகாதாரத் துறைச் செயலாளர்  ஸ்டேசிஸ் நிறுவனம்  tamilnadu  tamilnadu corona update  omandurar hospital
கரோனா நோயாளிகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவி அறிமுகம்

இந்தக் கருவியைப் பயன்படுத்தி கண்காணிப்பதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என அக்கருவியை வடிவமைத்துள்ள ஸ்டேசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான ரோகித், "கரோனா தொற்று பாதித்த நோயாளியின் செயல்பாடுகளை இக்கருவியின் மூலம் தொலைவிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிக்கமுடியும். இந்த அதிநவீனக் கருவியை புளூடூத் மூலம், டேப்லெட்டை இணைத்து நோயாளியின் உடல்நிலை இயக்கத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளமுடியும். மேலும், அந்தத்தகவல்களை மருத்துவருக்கு செவிலியர்கள் எளிதில் அனுப்பமுடியும்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கருவியை யு.எஸ்.எஃப்.டி.ஏ அங்கீகரித்துள்ளது. தற்போது, நோயாளியைக் கண்காணிக்க இக்கருவியை பயன்படுத்துவதால் செவிலியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல், பிபிஇ கிட் போன்ற உபகரணங்களுக்கு செலவிடும் தொகையைத் தடுக்கலாம்.

கரோனா நோயாளிகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவி

இக்கருவியின் மூலம் நோயாளியின் ரத்த அழுத்தம், உடல்வெப்பம், ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதயத்துடிப்பு, ஈசிஜி உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதுபோல் இருந்தால் அவற்றை முன்கூட்டியே மருத்துவர்களுக்கு எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பமும் இந்தக் கருவியில் இணைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தக்கருவியின் செயல்பாட்டை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். "இந்தக் கருவி ஓமந்தூரார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியான ஒன்று. இக்கருவி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தொற்றுப் பரவுவதைத் தடுக்கும்" என்றார். முன்னதாக, இக்கருவியை வடிவமைத்துக் கொடுத்த ஸ்டேசிஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்!

ABOUT THE AUTHOR

...view details