மத்திய அரசு புதிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்மீது கல்வியாளர்கள், பொதுமக்கள், மாநில அரசுகள் கருத்துகளைக் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்விக் கொள்கை குறித்து மாநில உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கை ஆலோசனை!
சென்னை: மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
புதிய வரைவு கல்விக் கொள்கை தலைவர் கஸ்தூரி ரங்கன் பள்ளிக் கல்வியை நான்கு பிரிவாக பிரித்து அளித்துள்ளார். அதில் குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வி, பாதுகாப்பு ஒருங்கிணைந்த கல்விப் பாடத்திட்டம், ஆசிரியர்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அளித்துள்ளார்.
இது குறித்து சிபிஎஸ்இ முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.