தமிழ்நாடு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அடுத்த டிஜிபி யார் என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைந்து (யுபிஎஸ்சி) தமிழ்நாடு அரசு முடிவு செய்ய வேண்டும். இதற்கான பட்டியலை ஏப்ரல் மாதமே தமிழ்நாடு அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பிவிட்டது.
அடுத்த டிஜிபி ஆகிறார் ஜே.கே.திரிபாதி? - tn police
சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக உள்ள (டிஜிபி) டி.கே. ராஜேந்திரன் இன்னும் சில தினங்களில் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கே.பி. மகேந்திரன், எஸ்.ஆர். ஜாங்கிட், ஜே.கே. திரிபாதி, சி.கே. காந்திராஜன். எம்.எஸ். ஜாபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, என்.தமிழ்செல்வன், ஆஷிஷ் பேங்ரா, சி. சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, ஏ.கே.ஜா உள்ளிட்ட சீனியர் அதிகாரிகளின் நீண்ட பட்டியலை யுபிஎஸ்சிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, குறுகிய காலத்தில் ஓய்வுபெறப் போகிறவர்களை டிஜிபி பட்டியலில் இருந்து யுபிஎஸ்சி புறக்கணித்துவிடும். அதன்படி எஸ்.ஆர். ஜாங்கிட், சி.கே. காந்திராஜன், ஆஷிஷ் பேங்ரா உள்ளிட்ட சில அதிகாரிகளை யுபிஎஸ்சி பரிசீலிக்கவில்லை எனத் தகவல்கள் வெளியானது.
தமிழ்நாடு டிஜிபிக்கான போட்டியில் ஜாபர் சேட், ஜே.கே.திரிபாதி, ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, எம்.கே.ஜா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இந்தப் பட்டியலில் ஜே.கே. திரிபாதிக்கே டிஜிபியாகும் வாய்ப்பு அதிகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.