தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு உதவ புதிய செயலி வெளியீடு! - புதிய செயலி

சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான புதிய செயலி தி.நகரில் வெளியிடப்பட்டது.

பெண்களின் வளர்ச்சிகான புதிய செயலி வெளியீடு !

By

Published : Jul 27, 2019, 7:36 PM IST

சென்னை தியாகராய நகரில் பெண்கள் உரிமைக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் புதிய செயலி வெளியிடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியநாராயணன் கலந்துகொண்டு செயலியை வெளியிட்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்த நிறுவனத்தின் இயக்குனர் சத்தியமூர்த்தி, ”கிராமப்புற மற்றும் இளம் வயது பெண்களுக்கு அவர்களின் தனிப்பட்ட அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு இந்த செயலி எளிமையாக இருக்கும். அவர்களின் உடனடி தேவைக்கான பொருட்களை இதன் மூலம் விற்பனை செய்துகொள்ளலாம்.

பெண்களின் வளர்ச்சிகான புதிய செயலி வெளியீடு

இந்த செயலியை பல வெளிநாடுகளிலும் தொடங்க உள்ளோம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details