சென்னை: சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனோடு, பன்முகத் திறன்களை வெளிக்கொணர்வதற்காக 33 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று (அக்.10) பெருநகர சென்னை மாநகராட்சியுடன் கையெழுத்தானது.
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கல்வித்துறையின் கீழ் செயல்படும் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனோடு, பன்முகத் திறன்களை வெளிக்கொணர்வதற்காக 33 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆர்.பிரியா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஓப்பந்தம் தொடர்பாக கையெழுத்தான நிகழ்வில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 420 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனோடு, பன்முகத் திறன்களை வெளிக்கொணர்வதற்காக பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்துள்ளன.
இவற்றை நடைமுறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி 33 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், “சென்னை பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்தவும், பருவ வயது குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல், வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த பயிற்சி வகுப்புகள், மூன்று கட்டங்களாக கணிதம், ஆங்கிலம், Stem மற்றும் Financial Literacy வகுப்புகள் நடப்படும்.
கூடுதல் பயிற்சிகள்:இந்த ஓப்பந்தம் மூலம், நவீன வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், வாழ்க்கைத் திறன் பயிற்சிகள், அதாவது பள்ளி படிப்பை முடித்த பின் அவர்களின் வேலைக்கான பயிற்சி மற்றும் கணித வகுப்புகள், மாணவ, மாணவியரை உறுதியான, பாதுகாப்பான சமுதாயமாக உருவாக்குவதற்கான பயிற்சி, மழலையர் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துதல், தொழில் வழிகாட்டுதல் பயிற்சி, மாணவர்களின் பரஸ்பர நன்மை குறித்த பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் பல்வேறு திறன் மேம்படுத்தும் பயிற்சி, மாணவர்களின் மனநிலையை மேம்படுத்திட பயிற்சி, சிக்கல் தீர்க்கும் திறன் விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் உள்ளிட்ட பன்முகத் திறன்களை வெளிக்கொணர்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திமுக எம்.பி ஆ.ராசாவின் 15 பினாமி நிறுவன சொத்துக்களை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!