தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா 'மாமன்னன்'?.. நெட்டிசன்கள் விளக்கம்! - வடிவேலு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது 'மாமன்னன்' திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 29, 2023, 7:55 PM IST

சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் இன்று (ஜூன் 29) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக இது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சேலத்தில் நடக்கும் ஒரு அரசியல் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காசிபுரம் தனித் தொகுதியில் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் ஃபகத் ஃபாசிலுக்கும் அதே கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வடிவேலு மற்றும் அவரது மகனான உதயநிதிக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.

இதில், வடிவேலுவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருப்பதாகவும் ஃபகத் ஃபாசில், உதயநிதி, கீர்த்தி ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினரின் அடக்கி ஆளும் குணத்தைக் கேள்வி கேட்டுள்ளார், இயக்குநர் மாரி செல்வராஜ் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் கதை தான் இது என்கின்றனர் சிலர். தனபால் அதிமுக ஆட்சியின்போது சபாநாயகராக இருந்தவர். பட்டியலின சபாநாயகர் இவர். இவரது கதாபாத்திரத்தில் தான் வடிவேலு நடித்துள்ளார்.‌ ஆனால், கதை வேறுமாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இருமுறை சட்டப்பேரவை சபாநாயகராக இருந்துள்ளார், தனபால். 2001ல் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மாமன்னன்

இவரை‌ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சபாநாயகராக நியமித்தார். இவரது வாழ்வின் இந்தப் பகுதிகளை கதையாக்கி அதற்கு, தனது பாணியில் திரைக்கதை அமைத்து மாமன்னனை இயக்கியுள்ளார், மாரி செல்வராஜ். ஒரே கட்சியில் இருந்தாலும் ஆதிக்க மனநிலை எப்படி ஒரு மனிதனை நடத்துகிறது, அதன் வலி எப்படி இருக்கும் என்பதை குறியீடுகள் மூலம் உணர்த்தியுள்ளார். வழக்கமாக இவரது படங்களில் வருவது போல் இதிலும் நாய், குதிரை, பன்றி போன்ற விலங்குகள் குறியீடுகளாக வருகின்றன.

‘தேவர்‌ மகன்’ படத்தின் இசக்கி கதாபாத்திரம் தான் வடிவேலு என்று முன்னர் பேட்டியில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். படத்தைப் பார்க்கும்போது பட்டியலின மக்கள் எப்போதுமே ஆதிக்க வர்க்கத்தினருக்கு கை கட்டி நிற்க மாட்டார்கள். அவர்களும் முன்னேறி தலைமைப் பதவிக்கு வருவார்கள் என்பதைத் தான் மாரி செல்வராஜ் சொல்ல முயன்றுள்ளார் என்று புரிகிறது.

இசக்கி சட்டப்பேரவை உறுப்பினராகி, அதைவிட உயர்ந்த பதவிக்கு சென்றால் என்ன ஆகும் என்பதே மாரி செல்வராஜ் முயன்றுள்ளார் என்று புரிகிறது. இசக்கி, சட்டப்பேரவை உறுப்பினராகி அதைவிட உயர்ந்த பதவிக்குச் சென்றால் என்ன ஆகும் என்பதே மாரி செல்வராஜ் பார்வையில் மாமன்னன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’. இதுவே மாமன்னன் சொல்ல வருவது.

இதையும் படிங்க:போலீஸை மிரட்டிய உதயநிதியின் ரசிகர்கள்: தஞ்சையில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details