சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர விண்ணப்பம் எப்போது? - மருத்துவப் படிப்புகள்
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Neet
இளநிலைப் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அடுத்தவாரம் தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "நீட் தோல்வியா? பயம் வேண்டாம்" - ஆளுநர் அறிவுரை