தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு - ஆளுநர் ரவி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப். 08) நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு
நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு

By

Published : Feb 8, 2022, 8:02 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தேர்வை விலக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வின் தேவையை விட்டுவிட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது.

இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்த மசோதாவை ஆளுநர் ரவி, கடந்த 1ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார்.

இது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (பிப் 08) காலை கூடியது.

இதில், தமிழ்நாடு அரசுத் தரப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது, அம்மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது - சபாநாயகர் அப்பாவு

ABOUT THE AUTHOR

...view details