தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு" - neet exam

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதில் பாதிப்பு உள்ளது என்பதே குழு உறுப்பினர்களின் கருத்தாக உள்ளதாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் தெரிவித்தார்.

ன்னாள் நீதிபதி ராஜன்
ன்னாள் நீதிபதி ராஜன்

By

Published : Jun 14, 2021, 4:19 PM IST

Updated : Jun 14, 2021, 5:10 PM IST

சென்னை:நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதித்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல் கூட்டம்

இந்த குழுவின் முதல் கூட்டம் மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜூன்.14) நடைபெற்றது. இதில், குழு உறுப்பினர்கள் டாக்டர் ரவீந்திரநாத், ஜவகர் நேசன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வின் பாதிப்பு

நீட் தேர்வு, தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான புள்ளி விபரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய குழு தலைவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஏ.கே. ராஜன், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்களை சேகரித்து வருவதாக கூறினார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் பேட்டி

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரின் கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பது என்பதாக உள்ளது. அரசு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. நீட் தேர்வினால் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை இறுதி கட்ட அறிக்கையில் தெளிவாக தெரிவிப்போம்.

இது தொடர்பாக மேலும் தகவல்களை திரட்டுவதற்காக அடுத்த கூட்டம் திங்கள்கிழமை (ஜூன்.21) நடைபெறும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாஸ்க் போடாதவர்களுக்கு மரண பயம் காட்டிய ஊராட்சி

Last Updated : Jun 14, 2021, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details