தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை தேவை - கூட்டு நடவடிக்கை குழு - etv bharat

புதிய நடைமுறைகளை அமல்படுத்துவதற்கு முன் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை தேவை
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை தேவை

By

Published : Aug 4, 2021, 7:49 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று (ஆக.4) சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "மின்வாரியத்தில் ஊதிய உயர்வு - வேலைப்பளு முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிவுகள், உபகோட்டங்கள், கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. மலைப்பகுதியில் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளரின் ஆலோசனையின்படி, களச்சூழலை கணக்கில் கொண்டு, மின் இணைப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரிவுகள் செயல்பட வேண்டும். அதேபோல கிராமப்புறங்களில் மின் மாற்றிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், நகரப்புறங்கள் பெருநகரங்களில் மின் இணைப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் பிரிவு அலுவலகங்கள் செயல்பட ஒப்பந்தம் காணப்பட்டது.

ஆனால், தற்பொழுது அறிவித்துள்ள அறிவிப்பு 2016 ஆகஸ்ட் 22 ஆம் தேதி மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானது. எனவே புதிய நடைமுறைகளை அமல்படுத்துவதற்கு முன் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details