சென்னை:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். திரௌபதி முர்மு நாளை (ஜூலை 2) சென்னை வர உள்ளார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
திரௌபதி முர்மு நிகழ்ச்சியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு அழைப்பு! - OPS and EPS calls for the Draupadi Murmu function
பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு நாளை சென்னையில் ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரௌபதி முர்மு
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் சென்னை வரும் திரௌபதி முர்மு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சி எனக் குற்றச்சாட்டு