தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 9:54 AM IST

ETV Bharat / state

தேசிய கல்வி கொள்கை 2020: உயர்கல்வித் துறை கருத்து கேட்பு தொடக்கம்

சென்னை: தேசிய கல்வி கொள்கையில் உயர்கல்வித் துறையில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள்,  பேராசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் உயர்கல்வித் துறை கருத்துகளை கேட்கிறது.

உயர்கல்வித்துறை
உயர்கல்வித்துறை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கையை வலியுறுத்துகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என முதலமைச்சர் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 2020இல் உயர்கல்வித் துறையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்வதற்கு உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைத்து அரசாணை செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது.

உயர்கல்வித் துறை உயர்மட்டக் குழுவின் ஆலோசனை அடிப்படையில் தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 24) ஆன்லைன் மூலம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகளவில் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான இணையதள வசதி பல்கலைக்கழகங்களின் வெப்சைட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020 www.mhrd.gov.in/site/upload file/mhrd/files/NEP Final English 0 .pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியில் மற்றும் ஆசிரியர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டலத்தில் காலை 9.30 முதல் 11.30 மணிவரை மாணவர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணிவரை பெற்றோர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணிவரை ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் காலை 9:30 முதல் 11.30 மணிவரை ஆசிரியர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணிவரை மாணவர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணிவரை பெற்றோர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், மதர் தெரசா பெண்கள் பல்கலை கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் காலை 9:30 முதல் 11.30 மணிவரை பெற்றோர்களிடமும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை ஆசிரியர்களிடமும், மதியம் 2.30 மணி முதல் 4 மணிவரை மாணவர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details