தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமனார் மாமியாருக்கு உதவாதவர் நாட்டு மக்களுக்கு எப்படி உதவுவார்: நாசரின் சகோதரர் கேள்வி - நாசர்

சென்னை: கமீலா நாசர் தனது சொந்த மாமனார் மாமியாருக்கு உதவாமல் நாட்டு மக்களுக்கு மட்டும் எப்படி உதவுவார் என நாசரின் சகோதரர் ஜவஹர் கேள்வி எழுப்பியுள்ளார்.

File Pic

By

Published : Mar 24, 2019, 10:27 PM IST

நடிகர் நாசரின் சொந்த சகோதரர் ஜவஹர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது,

Video

நடிகர் நாசர் மிகப்பெரிய நடிகர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் அவரின் தாய் தந்தையரை அவர் கவனிக்கவில்லை. கடந்த 25 வருடங்களாக தனது தாய் தந்தையர் உயிருடன் இருக்கிறார்களா என்ன செய்கிறார்கள் நல்லது கெட்டது என்று எதிலும் பங்கு பெற்றதில்லை. அது மட்டுமல்லாமல் அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. அந்த மூன்று குழந்தைகளையும் பெற்றோர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தவில்லை.

எனக்கு தெரிந்து கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு மூன்றுமுறை மட்டுமே அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பிறகு அவர்களை நானும் பார்த்ததில்லை எனது தாய் தந்தையரும் பார்த்ததில்லை. நடிகர் நாசர் மேடைகளில் நன்றாக பேசுகிறார். இவ்வளவு அறிவாளி ஏன் தனது சொந்த தாய் தகப்பனார் கவனிக்கவில்லை என்பது பெரிய கேள்வி. இரண்டாவது சிறிய வாக்குவாதத்தில் நான் இந்தப் பிரச்னையை நடிகர் சங்கத்திற்கு கொண்டு சென்றேன். அங்கு உள்ள பொறுப்பாளர்களையும் நான் சந்தித்தேன். அவர்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போது தேர்தல் வருகிறது கமீலா மேடம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் எப்படி போட்டியிடலாம் என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால் மாமனார் மாமியார் மற்றும் மன வளர்ச்சி இல்லாத ஒரு பையனுக்கு உதவி செய்ய முடியாத இவர்கள் எப்படி நாட்டிற்கு உதவி செய்வார்கள். இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஓட்டுப்போடும் உரிமை அனைவருக்கும் உண்டு. தயவுசெய்து ஓட்டு போடுங்கள். ஆனால், இவர்களுக்கு போடலாமா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இது குறித்து பத்திரிகை சந்திப்பில் தெளிவாக சொல்லப் போகிறேன் தற்போது சின்னதாக வீடியோ செய்தியாக அனுப்புகிறேன். கண்டிப்பாக உங்களை அனைவரையும் நான் சந்திப்பேன் என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details