சென்னை: "ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது" என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆமாம், குறிப்பிட்டுள்ளது உண்மை தான். ஆனால், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள், முறைகேடுகள் அனைத்தும், மாநில அரசுகளை நோக்கித் தான் சொல்லப்பட்டுள்ளன என்பதைச் சொல்லத் தவறி விட்டீர்களே முதல்வர் அவர்களே? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “தமிழகத்தில் இந்த திட்டத்தில் பின்வரும் குறைகள் அல்லது 'உங்கள் மொழியில்' முறைகேடுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1.தமிழகத்தில் ஒரே அல்லது தவறான ஆதார் எண்கள், குறிப்பாக 7 எண்களில் மட்டும் 4761 காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் குறித்த தரவுகளைத் தமிழக அரசே தன் தகவல் தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையிலேயே வடிவமைத்து இயக்குவதால், இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும் இதைத் தடுக்க இனி தேசிய சுகாதார ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. (சி ஏ ஜி அறிக்கை 11/2023, பக்கம் 18)
2. தமிழ்நாட்டில் 1,07,040 ஓய்வூதியம் பெறுபவர்கள் (இவர்களுக்கு இந்த திட்டத்தில் இடமில்லை) இந்த திட்டத்தில் பயன் பெற்றுள்ளார்கள் என்றும் அவர்களுக்காகக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாநில சுகாதார ஆணையத்தால் அளிக்கப்பட்ட தொகை ரூ.22.44 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.
3. தமிழ்நாட்டில் தமிழக சுகாதார ஆணையத்தால் 57 மருத்துவமனைகளுக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. (பக்கம் எண்.34)
4. தமிழ்நாட்டில், அதிகாரப் பூர்வமாகத் தரவுகளில் இல்லாத பயனாளிகளுக்கு 5990 எண்களின் மூலம் ரூ.18.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.