தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விவேக் பெயரில் சாலை.. கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்.. மே.3 பெயர்ப் பலகை திறப்பு..! - நடிகர் விவேக் சாலை

மறைந்த நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற விவேக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், இதற்கான அரசாணையை வெளியிட உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

actor vivek name to his area  actor vivek area  name of actor vivek going to named to his area  நடிகர் விவேக் பெயரில் சாலை  நடிகர் விவேக் சாலை  நடிகர் விவேக்கின் தெருவுக்கு அவரது பெயரே வைப்பு
நடிகர் விவேக் பெயரில் சாலை

By

Published : May 1, 2022, 7:58 PM IST

சென்னை:கலைமாமணி, பத்மஸ்ரீ, கெளரவ டாக்டர் பட்டம் என்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரரான நடிகர் விவேக், மேடை காமெடி பேச்சாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய நடிகராக வளர்ந்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர்.

தனது படங்களில் சிரிக்க வைக்கும் காமெடியுடன், சிந்திக்க வைக்கும் கருத்துகளையும் மக்களிடையே அதிகம் புகுத்தியவர், விவேக். சின்னக்கலைவாணர் என அனைவராலும் பாராட்டப்பட்டு வந்த இவர், திரைப்பிரபலமாக மட்டும் இல்லாமல், சமூக ஆர்வலராகவும் வலம் வந்தவர். இவருக்குள் பன்முகத்தன்மை உண்டு.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மீதான பற்றின் காரணமாக, அவரது பெயரால் 'க்ரீன் கலாம்' என்ற ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தி வந்தார். ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த விவேக்கின் மனைவி, “சமூகத்திற்காகவும், கலைத்துறைக்காகவும் விவேக் நிறைய பங்காற்றி உள்ளார். ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற அவரது கனவை அவரது ரசிகர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதனால் அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

விவேக் குடும்பத்தினரின் இந்த கோரிக்கையை ஏற்று அவர்களின் தெருவுக்கு விவேக் பெயரை வைக்க முதலமைச்சர் அரசாணை வெளியிட உத்தரவிட்டுள்ளதாகவும், மே. 3ஆம் தேதி பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பலரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை பின்னணியில் சரத்குமார், கௌதம் கார்த்தி நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம்!

ABOUT THE AUTHOR

...view details