தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் - high court chennai

சென்னை: சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு

By

Published : Dec 13, 2019, 9:56 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 3,000-க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழ்நாடு அமைச்சரவை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்தநாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்' - பிரதமருக்கு நளினி கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details