தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரமுடியாது:தமிழக அரசு வாதம்!

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

high court of madras

By

Published : Aug 13, 2019, 7:48 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு தமிழக உள்துறை செயலாளர் சார்பிலும் வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நளினி

அதில் 7 பேரை விடுதலை செய்ய, தமிழக அரசு அளித்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு, ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடிவு அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது என்றும், ஆயுள் கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது என்றும்; முன் கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி மட்டும் அரசுக்கு உத்தரவிட முடியும் எனவும் கூறி, நளினியை முன் கூட்டி விடுதலை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் கூறியுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா,சரவணன் அமர்வு வழக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details