சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் சரியாகத்தான் உள்ளது. அதேபோல் அஞ்சல் வாக்குகளை அளிக்கக் கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். இரு அணிகளும் போட்டி போட்டுக் கொள்கின்றனர். மேலும் தண்ணீர் சிக்கலை மறைப்பதற்காகத்தான் இந்தத் தேர்தலை பெரிதாக்குகிறார்கள் என்றார்.
தண்ணீர் சிக்கலை மறைக்க நடிகர் சங்கத் தேர்தல் - மன்சூர் அலிகான்
சென்னை: தண்ணீர் சிக்கலை மறைப்பதற்காக நடிகர் சங்கத் தேர்தலை பெரியதாக்குகிறார்கள் என நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான்
இதைத் தொடர்ந்து நடிகை குஷ்பு கூறுகையில், நடிகர் சங்கத் தேர்தல் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தல் நடக்குமா என்ற கேள்வி அண்மைக்காலங்களில் இருந்து வந்தது உண்மைதான். தேர்தலில் நேர்மை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி வெற்றிபெறும். சில நடிகர்களுக்கு தேர்தல் எங்கு நடைபெறுகிறது என்பது தெரியவில்லை. நேற்று இரவு தான் எங்களுக்கே இந்த இடம் உறுதி செய்யப்பட்டது என்றார்.