தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு - நடிகர் சங்கத் தேர்தல்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

election

By

Published : Jun 23, 2019, 5:40 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.

நாசர், விஷால் உள்ளிட்டோரின் பாண்டவர் அணி, பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகள் இத்தேர்தலில் மோதுகின்றன.

இந்நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1,579 நடிகர், நடிகைகள் தங்களின் வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

இத்தேர்தலில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details