தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் தீக்குளிப்பு சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின் - tn assembly

மயிலாப்பூர் அருகே கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : May 9, 2022, 2:10 PM IST

Updated : May 9, 2022, 6:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாகவும் , மயிலாப்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரிழந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இனி வரக்கூடிய காலகட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து மக்கள் நலன் சார்ந்து மறுகுடியமர்வு கொள்கை விதிமுறைகளோடு வகுக்கப்படும் என்றார்.

முதலமைச்சர் வருத்தம்: இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , ’இச்சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளில், வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிச்சயம் வீடுகள் ஒதுக்கித் தர அரசு முடிவு எடுத்திருப்பதாக’ கூறினார்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு - நடந்தது என்ன?

Last Updated : May 9, 2022, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details